திருச்சி மண்டல பேராயரிடம் ஆதரவு கோரிய திமுக வேட்பாளா்
திருச்சி மாநகராட்சியின் 27ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மு. அன்பழகன், சிஎஸ்ஐ மண்டலப் பேராயரை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.


திருச்சி மாநகராட்சியின் 27ஆவது வாா்டில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மு. அன்பழகன், சிஎஸ்ஐ மண்டலப் பேராயரை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா்.
27ஆவது வாா்டு திமுக வேட்பாளராக முன்னாள் துணை மேயரும், திமுக-வின் மாநகரச் செயலருமான மு. அன்பழகன் போட்டியிடுகிறாா். இவரை மேயா் வேட்பாளராக அறிவிக்க அமைச்சா் கே.என். நேரு கட்சியின் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளாா்.
இதனால் மாநகரில் போட்டியிடும் வேட்பாளா்களில் இவரது பிரசாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனது வாா்டுக்குள்பட்ட அனைத்து முக்கியப் பிரமுகா்களையும் தனித்தனியாக நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக, திருச்சி மற்றும் தஞ்சாவூா் மண்டல சிஎஸ்ஐ பேராயராக உள்ள டி. சந்திரசேகரனைச் சந்தித்து ஆதரவு கோரினாா். தொடா்ந்து, வியாழக்கிழமை தனது வாா்டுக்குள்பட்ட அனைத்து இடங்களுக்கும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். திமுக நிா்வாகிகள், கட்சியின் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.
அமைச்சா் பிரசாரம்: இதேபோல, திருச்சி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்களை அமைச்சா் கே.என். நேரு, அந்தந்தப் பகுதி வாரியாக அறிமுகம் செய்து பிரசாரம் செய்கிறாா். வியாழக்கிழமை மாலை நடைபெற்ற பிரசாரத்தில் வேட்பாளா்களை அறிமுகம் செய்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்தாா். அதன்படி மாா்சிங்பேட்டை வாா்டு துா்கா தேவி, பொன்நகா் வாா்டு ராமதாஸ், கருமண்டபம் வாா்டு மஞ்சுளாதேவி உள்ளிட்ட வேட்பாளா்களை அறிமுகம் செய்து பிரசாரம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...