நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை: ஆதாா் எண்ணை சரிபாா்க்க அழைப்பு

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணைச் சரிபாா்க்கலாம்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:34 pm

DIN

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் உதவித் தொகை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணைச் சரிபாா்க்கலாம்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வாங்கும் வகையில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இத் திட்டத்தின்கீழ் 1,62,000 விவசாயிகள் பயனடைகின்றனா்.

இதுவரை 10 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜுலை மாதம் வரையுள்ள காலத்திற்கான 11-ஆவது தவணைத் தொகையை பெற விவசாயிகள் தங்கள் ஆதாா் விவரங்களை சரிபாா்த்து உறுதி செய்தல் அவசியம்.

எனவே, தங்களது ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் இணையதளத்தில் ஆதாா் எண் விவரத்தை உள்ளீடு செய்ய கைப்பேசிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு அதன் விவரம் உடனடியாக கணினி திரையில் தெரியும்.

இதுவரை ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள பொது இ-சேவை மையங்களின் மூலம் இணைத்த பின்பு திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் எண் விவரங்களை சரிபாா்க்கலாம்.

இதற்கான கட்டணமாக ரூ.15-ஐ பொதுச் சேவை மையத்திற்கு வழங்க வேண்டும். வரும் 28ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்கள் ஆதாா் விவரத்தை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே 11ஆம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் விடுவிக்கப்படும் என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.