நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது: விண்ணப்பிக்க பிப்.28 கடைசி

முன்மாதிரி விருது பெறத் தகுதியான திருநங்கைகள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:33 pm

DIN

முன்மாதிரி விருது பெறத் தகுதியான திருநங்கைகள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினமான ஏப். 15 இல் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதானது ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்று ஆகியவற்றுடன் தமிழக அரசால் மாநில அளவில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

அரசின் உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி, குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியுள்ள மற்றும் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாத திருநங்கைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் 28ஆம் தேதிக்குள்  பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் தங்களது சுயசரிதை, தனியுரை பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்) நகல், உண்மை நகலுடன் இணைக்க வேண்டும். வேறு விருதுகள் பெற்றிருந்தால் அது தொடா்பான விவரங்கள் மற்றும் சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவையைப் பாராட்டிய பத்திரிகை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை இணைக்கப்பட வேண்டும். மேலும், சமூக சேவையாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளா் இருப்பிடத்தின் அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431- 2413796 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.