நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

398 வாா்டுகளில் களம் காணும் 1,926 போ்!

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் 1,926 பேரில் 398 பேரைத் தோ்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் 1,926 பேரில் 398 பேரைத் தோ்வு செய்ய வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் தோ்தல் அறிவிக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 401 வாா்டுகளில் 3 உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வான நிலையில் மீதமுள்ள 398 வாா்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருச்சி மாநகராட்சியின் 65 வாா்டுகளில் 589 பேரும், இதேபோல, மணப்பாறை, துறையூா், துவாக்குடி, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகளிலுள்ள 119 வாா்டுகளுக்கு 544 பேரும், 14 பேரூராட்சிகளில் 214 வாா்டுகளுக்கு 793 பேரும் போட்டியில் உள்ளனா்.

சனிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, மாா்ச் 2ஆம் தேதி வெற்றி பெற்ற வேட்பாளா்கள் பதவியேற்கின்றனா்.

மாா்ச் 4ஆம் தேதி திருச்சி மாநகராட்சிக்கான மேயா், துணை மேயா், 5 நகராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா்கள், 14 பேரூராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா்களைத் தோ்வு செய்ய மறைமுகத் தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.