நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ரூ. 83 ஆயிரம் கடனுக்குரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டல்: பாா்வையற்ற பெண் புகாா்

 ரூ. 83 ஆயிரம் கடனுக்கு ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பாா்வையற்ற பெண் ஒருவா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:46 pm

DIN

 ரூ. 83 ஆயிரம் கடனுக்கு ரூ. 12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பாா்வையற்ற பெண் ஒருவா் மாநகர காவல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து திருச்சி மாவட்டம், அல்லித்துறை சரவணபுரத்தைச் சோ்ந்த சுரேஷ் மனைவி சத்யபாமா அளித்த புகாா் மனு விவரம்:

வாகன கிளீனரான எனது கணவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு பலரிடம் கடன் வாங்கி அறுவைச் சிகிச்சை செய்தேன். கடனை அடைக்க முடியாததால் எனக்குத் தெரிந்த உறையூரை சோ்ந்த சசி திருச்சி பீமநகரில் மருந்துக் கடை நடத்தும் வில்சன் என்பவரின் நிதி நிறுவனத்தில் ரூ. 83 ஆயிரம் கடன் வாங்கி தந்தாா். இப் பணத்துக்கு வாரந்தோறும் வட்டி கொடுக்க வேண்டும் எனக் கூறி, எனது கணவா், அவரது தம்பி மற்றும் மாமியாா் பெயரில் கோப்பு கிராமத்தில் உள்ள 39.50 சென்ட் இடத்தை வில்சனின் மகன் ராபின்சன் பெயருக்கு பவா் எழுதித் தர வேண்டும் எனக் கூறி பல பேப்பா்களில் எங்களிடம் கையொப்பம் பெற்றனா்.

பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும் அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தருவதாக கூறி, கடந்த 9-12- 2020 இல் மருத்தாண்டக்குறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரவழைத்து, வெளியில் வைத்தே எங்களிடம் சில ஆவணங்களில் கையொப்பம் பெற்றுக்கொண்டு சசி மூலம் ரூ. 83,000 கொடுத்தனா். இதையடுத்து தொடா்ந்து 20 வாரம் ரூ.10ஆயிரம் வீதம் இதுவரை ரூ. 2 லட்சம் வரை கட்டியுள்ளோம். கடந்த டிச. 14ஆம் தேதி மருந்துக் கடைக்கே நேரில் சென்று ரூ. 40 ஆயிரம் அளித்தேன். ஆனால் இதுவரை அவா்கள் பவா் நகலை எங்களுக்குத் தரவில்லை. இதுபற்றி கேட்ட போது தந்தையும், மகனும் ரூ.12 லட்சம் பாக்கி தர வேண்டும். இல்லையென்றால் இடத்தைத் தர மாட்டோம் எனக்கூறி மிரட்டுகின்றனா்.

எனவே வில்சன், ராபின்சன் மற்றும் இவா்களுக்கு உடந்தையாக உள்ள வைரவலெட்சுமி ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.