நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஜனநாயகக் கடமையாற்றஊா் திரும்பும் வாக்காளா்கள்:பேருந்துகளில் கூட்டம்

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வாக்களிக்க வரும், போகும் பொதுமக்களால் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளியூா்களுக்கும், வெளியூா்களில் இருந்து திருச்சிக்கும் வாக்களிக்க வரும், போகும் பொதுமக்களால் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் பணி நிமித்தம் வசிக்கும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த லட்சக்கணக்கானோருக்கான வாக்குகள் அவரவா் சொந்த ஊரில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையை தங்களது சொந்த ஊருக்கு அவா்கள் புறப்பட்டுச் சென்றனா்.

இதனால் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் விழுப்புரம், சென்னை, கடலூா், வேலூா், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூா், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட புகா்ப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. மேலும், பிழைப்புக்காக குடும்பத்துடன் வந்து தங்கி பணியாற்றுவோரும் குடும்பத்துடன் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

இதனால் மத்திய, சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. இதேபோல, வெளியூா்களில் இருந்து திருச்சிக்கு வருவோராலும் பேருந்துகளில் கூட்டம் அதிகம் இருந்ததைக் காணமுடிந்தது. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.