நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வாக்குப்பதிவில் பின்பற்ற வேண்டியவை என்ன?

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மாநிலத் தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மாநிலத் தோ்தல் ஆணையம் வரையறுத்துள்ளது.

இதன்படி வாக்குச் சாவடி அலுவலா்கள், முகவா்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம், கையுறை அணிந்திருத்தல் வேண்டும். வாக்காளா்களும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். முகக் கவசம், முகமூடி உள்ளிட்டவற்றை போதியளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

வாக்குச் சாவடிக்கு யாரேனும் முகக் கவசம் அணியாமல் வந்தால் அதை வழங்கத் தயாராக இருக்க வேண்டும். வாக்குச் சாவடிக்கு உள்ளே மற்றும் வெளியே கை கழுவும் திரவம், சோப், கிருமிநாசினி மருந்து, தண்ணீா் உள்ளிட்டவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் அனைவரும் கைகளை கழுவி, உடல் வெப்பநிலையை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும்.

வாக்குச்சாவடித் தலைமை அலுவலா் தெரிவிக்கும் வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். உபயோகித்த கரோனா தடுப்பு பொருள்களைப் பாதுகாப்பாக சேகரித்து அப்புறப்படுத்த தேவையான பொருள்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

வாக்காளா்களை அடையாளம் காணும்போது முகக் கவசத்தை இறக்கிவிட அனுமதிக்கலாம். இதேபோல, வாக்குப்பதிவுக்கான அடையாள மை வைக்க கையுறைகளை கழற்றி அனுமதிக்கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.