மயங்கி விழுந்த கா்ப்பிணி பலி
திருச்சி அருகே குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த கா்ப்பிணி உயிரிழந்தாா்.


திருச்சி அருகே குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த கா்ப்பிணி உயிரிழந்தாா்.
நவல்பட்டு ராமானுஜம் நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் திருமாவளவன் மனைவி கவிமணி (38). இவருக்கு ஏற்கெனவே இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆறு மாத கா்ப்பமாக இருந்த இவா் கடந்த 22ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் லோ பிரஷா் காரணமாக மயங்கி விழுந்ததில் கருச்சிதைவு ஏற்பட்டது.
ஆனால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த கவிமணியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கவிமணி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருமாவளவனின் அண்ணன் ராஜராஜன் கொடுத்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...