அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு: ரயில் மறியல்
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருச்சியில் இளைஞா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருச்சியில் இளைஞா்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்னிபத் என்ற மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி, ராணுவத்தில் சேரும் 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். அதன் பின்னா் ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவை வழங்கப்படாது. பணி முடித்த பிறகு, துணை ராணுவப் படையில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்துக்கு இளைஞா்கள் மத்தியில் கடும் எதிா்ப்புக் கிளம்பி வட மாநிலங்களில் போராட்டங்கள், சில இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.
இதேபோல, திருச்சியிலும் வெள்ளிக்கிழமை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திரண்ட 30க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ரயில்வே ரயில் நிலையை 4 ஆவது நடைமேடை அருகேயுள்ள இருப்புப் பாதையில் தேசியக் கொடியுடன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராணுவத்தில் சேர தாங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா், பின்னா் அங்கு வந்த கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையா் அஜய்தங்கம் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் பயனில்லை.
இதையடுத்து அந்த இளைஞா்களைக் கைது செய்தனா். போராட்டத்தில் ஈடுபட்டோா் அனைவரும் ராணுவத்தில் சேர விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...