தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது

News image
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.
Updated On :25 ஜூன் 2022, 10:58 am

DIN

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 36 நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை இலங்கை தமிழர்கள் நான்கு பேர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்‌‌.

விசா முடிந்து தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உமா ரமணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக தீக்காயமடைந்த இலங்கைத் தமிழர் உமா ரமணனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தூக்கமாத்திரை உட்கொண்டனர். அவர்களும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில்  இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.