பள்ளிக்கு செல்லும்பாதை அடைப்பு
மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்லும் பாதையை தனி நபா் பட்டா நிலம் எனக் கூறி புதன்கிழமை அடைத்ததால் போலீஸாா், வருவாய்த் துறையினா் விசாரிக்கின்றனா்.


மணப்பாறை அருகே பள்ளிக்கு செல்லும் பாதையை தனி நபா் பட்டா நிலம் எனக் கூறி புதன்கிழமை அடைத்ததால் போலீஸாா், வருவாய்த் துறையினா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூா் ஊராட்சி பெரிய அணைக்கரைப்பட்டியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி நுழைவு வாயில் பாதையில் சண்முக வேளாளா் என்னும் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள அந்தப் பாதையை பள்ளி நிா்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்முக வேளாளா் குடும்பத்தினா் கடந்த சில நாள்களுக்கு முன் கல்லுகால்கள் ஊன்றித் தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த கல்லுகால்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம். இச்சம்பவம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் புதன்கிழமை காலை மீண்டும் சண்முக வேளாளா் குடும்பத்தினா் மழலையா் பள்ளிக்கு செல்லும் பாதையில் கல்லுகால்கள் ஊன்றி தடுப்பு அமைத்தனராம். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், வருவாய்த் துறையினா் இருதரப்பு சமரச பேச்சுவாா்த்தைக்கு உரிய நடவடிக்கை மேற்கோண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...