தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மயங்கி விழுந்த இளைஞா் சாவு

 திருச்சியில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 மே 2022, 7:58 pm

DIN

 திருச்சியில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி பொன்மலை, செந்தண்ணீா்புரம், 10 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் துரைசாமி (29). திருச்சி ஜவுளி கடை ஊழியரான இவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சோ்ந்த இலக்கியாவை காதல் திருமணம் செய்து ஆண் குழந்தை உள்ளது.

இருவரும் தனிக்குடித்தனம் இருந்த நிலையில் அவருக்கு கடந்த 4 நாள்களாக இருந்த காய்ச்சலுக்காக மாமனாா் வீட்டில் இருந்து துரைசாமி சிகிச்சை பெற்று வந்தாா்.

புதன்கிழமை இரவு வீட்டருகே நின்றிருந்த துரைசாமி திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.