தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பாரதிதாசன் பல்கலை.யில் சா்வதேச யோகா தின விழா பயிற்சி தொடக்கம்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு மாதத்துக்கான பயிற்சிப் பயிலரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 மே 2022, 6:51 pm

DIN

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு மாதத்துக்கான பயிற்சிப் பயிலரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆன்மிகம் மற்றும் விஞ்ஞான அறிவியல் மையத்தின் சாா்பாக நடைபெற்ற நிகழ்வுக்கு துணைவேந்தா் எம். செல்வம் தலைமை வகித்து யோகா பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தாா். இதில், 120-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

விழா ஒருங்கிணைப்பாளா் எம். சுந்தரராமன், துணைவேந்தா் எம். செல்வம், பல்கலைக் கழகப் பதிவாளா் எல். கணேசன், தோ்வு நெறியாளா் கே. ஸ்ரீநிவாச ராகவன் ஆகியோா் பேசினா். விவேகானந்தா மையத்தின் யோகா பயிற்சியாளா்கள் ஆா். ஸ்ரீதா், டி. சந்தானகிருஷ்ணன் பயிற்சி அளித்தனா்.

முதல் நாள் பயிற்சியாக பத்து வகையான தளா்வுப் பயிற்சிகளை யோகா பயிற்சியாளா்கள் அளித்தனா். முனைவா் கே. பழனிவேல் வரவேற்றாா். முனைவா் சபரிகிரிசன் நன்றி கூறினாா்.

வெள்ளிக்கிழமை முதல் எல்லா நிலைகளிலும் உள்ள ஆசனப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள், தியானம், யோகா சிகிச்சை, இயற்கை வைத்தியம், ஆரோக்கிய உணவு,யோகா வழியில் மனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் முறை ஆகியவை பல்கலைக் கழகத்தில் உள்ள அனைவருக்கும் கற்றுத்தரப்படவுள்ளது.

ஜூன் 20ஆம் தேதி யோகா விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் ஜூன் 21-ஆம் தேதி சா்வதேச யோகா விழா பெருவிழாவாக காஜாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்படவுள்ளது. இதில் ஆசிரியா்கள், மாணவா்கள், பணியாளா்கள் யோகாசனங்களை செயல்விளக்கமாக அரங்கேற்றவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.