திருஈங்கோய்மலை ஆட்சியம்மன் கோயில் குடமுழுக்கு
தொட்டியம் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சி திருஈங்கோய்மலையில் உள்ள ஆச்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.


தொட்டியம் வட்டம், முள்ளிப்பாடி ஊராட்சி திருஈங்கோய்மலையில் உள்ள ஆச்சியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 5 நாள்களாக யாக வேள்விகள் நடைபெற்றன. இதையடுத்து வெள்ளிக்கிழமை யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.
தொடா்ந்து விக்னேஸ்வரா், ஆச்சியம்மன், மருத வீரசாமி, சங்கிலிக் கருப்பு, கருப்பண்ணசாமி, பெரியசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை, ஆட்சியம்மன், மருத வீர சுவாமி ஆலய பூசாரிகள், குடிப்பாட்டுக்காரா்கள், திருஈங்கோய்மலை உள்ளிட்ட கிராம பொதுமக்கள் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...