திருச்சி மக்கள்மன்ற வளாகத்தில் தீ விபத்து
திருச்சி தில்லை நகர், மக்கள் மன்ற வளாகத்தில் அமைந்துள்ள துணிக்கடைகளில் திங்கள் கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.


திருச்சி: திருச்சி தில்லை நகர், மக்கள் மன்ற வளாகத்தில் அமைந்துள்ள துணிக்கடைகளில் திங்கள் கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி தில்லைநகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் மக்கள் மன்றம் அமைந்துள்ளது. இதில் தனியார் சிலர் இணைந்து ஆயத்த ஆடைகள் விற்பனை கண்காட்சியை நடத்தி வருகின்றனர் . திங்கள்கிழமை இரவு லேசான மழை பெய்தது, இதனை ஒட்டி இரவு 11:30 மணி அளவில் துணிக்கடைகளின் உள்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மின்சசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளே இருந்த துணிகள் பற்றி எரியத் தொடங்கின.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
தகவல் அறிந்து, திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா தலைமையில் நிலைய அலுவலர் நாகவிஜயன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 12 பேர் 3 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு நேரத்தில் தில்லை நகர் பிரதான பகுதியில் நிகழ்ந்த இந்த தீ விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சேதம் மதிப்பு குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...