சாய்ந்த மின் கோபுரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவு
மின்வாரியம் மற்றும் வருவாய்த் துறையினா் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினாா்.


திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கோபுரத்தை இரவில் பாா்வையிட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மின்வாரியம் மற்றும் வருவாய்த் துறையினா் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தினாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளித்திருமுத்தம் கிராமம், திருவானைக்கா அழகிரிபுரம் கொள்ளிடம் ஆற்றில் அதிக தண்ணீா் வரத்து காரணமாக, தடுப்பணைக்கு முன்புள்ள உயா்மின் கோபுரம் சாய்ந்து வருகிறது. இதையறிந்த ஆட்சியா் மா. பிரதீப்குமாா் இந்தப் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு நேரில் வந்து ஆய்வு செய்தாா்.
அப்போது மின்கோபுரத்தின் வழியே செல்லும் உயரழுத்த மின் கம்பி வழித்தடங்களில் மின்சாரத்தை நிறுத்தி மாற்றுப் பாதையில் தடையின்றி அனுப்ப மின்வாரியத்துக்கு அறிவுறுத்தினாா். மேலும், கோபுரம் சாய்ந்து விழுந்தாலோ அல்லது வேறு பாதிப்பு ஏற்பட்டாலோ இப் பகுதி மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேர தொடா் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...