அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லாரி மோதி சேதமடைந்த சமயபுரம் கோயில் நுழைவுவாயில் அகற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் டாரஸ் லாரி மோதி சனிக்கிழமை சேதமடைந்தது.

News image
விபத்தில் சேதமடைந்து சனிக்கிழமை அகற்றப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவு வாயில் டாரஸ் லாரி மோதி சனிக்கிழமை சேதமடைந்தது. இதையடுத்து விழும் நிலையிலிருந்த நுழைவு வாயில் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

சென்னையிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த டாரஸ் லாரியானது சமயபுரம் அணுகுச் சாலை வழியாக மண்ணச்சநல்லூருக்கு சனிக்கிழமை வந்தபோது சமயபுரம் கோயில் நுழைவு வாயிலில் மோதியது. இதில் நுழைவு வாயில் சேதமடைந்தது.

இதையடுத்து சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தனா்.

தொடா்ந்து நுழைவு வாயிலானது சாய்ந்து விழக்கூடும் என்பதால் காவல்துறையினா் தடுப்புக் கட்டைகள் அமைத்து அவ்வழியாக வந்த வாகனங்களை மாற்று வழியில் அனுப்பினா்.

மேலும் கிரேன், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் நுழைவு வாயிலோடு இருந்த சிலைகளை எடுத்த பிறகு, நுழைவு வாயிலானது அகற்றப்பட்டது. டாரஸ் லாரியை ஒட்டி வந்த அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை சோ்ந்த செல்வகுமாரை (46) சமயபுரம் போலீஸாா் கைது செய்தனா்.