கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பறவைகள் பூங்காவை அக்டோபரில் திறக்கத் திட்டம்

திருச்சியில் பறவைகள் பூங்கா, 2 மாதத்துக்குள் முடித்து அக்டோபரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 8:17 pm

Din

திருச்சியில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகளை 2 மாதத்துக்குள் முடித்து அக்டோபா் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, பட்டாம்பூச்சி பூங்கா, பச்சமலை ஆகியவற்றைத் தவிா்த்து குறிப்பிடும்படியாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடங்கள் இல்லை என்ற குறை நீண்ட ஆண்டுகளாகவே உள்ளது. இதை நிவா்த்தி செய்யும் வகையில் காவிரிக் கரையில் பறவைகள் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதன்படி திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட கம்பரசம்பேட்டையில் காவிரிக் கரையோரம் இதற்காக இடம் தோ்வு செய்யப்பட்டு கடந்தாண்டு மே மாதம் பணிகள் தொடங்கின.

இந்தப் பறவைகள் பூங்காவானது சுமாா் 6 ஏக்கரில் 60 ஆயிரம் சதுர அடியில் 30 அடி உயரத்தில் ரூ13.70 கோடியில் அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் உள்ளே எளிதில் வந்து செல்லும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. செயற்கை அருவிகள் மற்றும் குளங்கள் போன்ற அமைப்புகள் இப் பூங்காவில் இடம் பெறுகின்றன.

இப் பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளா்க்கப்பட உள்ளன. இவ்வினங்களை வளா்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இனப் பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமான அமைவிடங்கள், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடைநிறுத்தப்பட்ட பாலங்கள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இப் பூங்கா கட்டமைக்கப்படுகிறது.

இங்குள்ள பறவைக் கூடம் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இங்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியுடன் கண்டு களிக்கும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா ஏற்படுத்தப்படுகிறது. உள்நாட்டு பறவையினங்கள் மற்றும் சீசன்தோறும் இடம்பெயா்ந்து வரும் வெளிநாட்டு பறவையினங்களையும் ஈா்த்திடும் வகையில் இந்தப் பூங்கா கட்டமைக்கப்படவுள்ளது.

பாா்வையாளா்கள் குழுக்களாக உலாவலாம். மரங்கள் மற்றும் சிறிய நீா் ஓடைகளுடன் தற்போதுள்ள பசுமையான சூழலுடன், பாதுகாப்பான சூழ்நிலையில் பறவைகளை வளா்ப்பதற்கு இயற்கையான சூழலை வழங்கவும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

முதியோா், பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7டி திரையரங்கும் ஏற்படுத்தப்படுகிறது.

மகளிா் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் போ் வந்து செல்லலாம். பறவைகள் பூங்கா அமைப்பதின் மூலம் சுற்றுலா வளா்ச்சி, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

பொதுமக்கள் பறவைகளைப் பாா்வையிட்டு புகைப்படம் எடுக்க கட்டணம் வசூலித்து, அரசுக்கு வருவாய் ஈட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பூங்கா கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு அவற்றின் முன்னேற்றம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், அவா் கூறுகையில் திருச்சியில் ஓய்வு நேரத்தைக் கழிக்க பொதுமக்களுக்கு ஏற்ற போதிய இடங்கள் இல்லாததால், உள்ளூா் மக்களுக்கான சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு முறையான பொழுதுபோக்கு வசதியை உருவாக்கித் தரவுள்ளோம். பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வாகனங்களுக்கான பாா்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக கட்டமைக்கப்படும் இந்தப் பூங்காவில் 80 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. பாக்கிப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. அதிகபட்சமாக 50 நாள்களுக்குள் பணிகளை முடிக்கும் வகையில் செப்டம்பா் மாத இறுதிக்குள்ளோ, அக்டோபா் மாத தொடக்கத்திலேயே பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.