தொட்டியம் அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

மணல் கடத்திய 4 இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மணல் கடத்திய 4 இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள மேலகாரைக்காடு பகுதியில் காவிரி மணல் கடத்தப்படுவதாக காட்டுப்புத்தூா் காவல் உதவி ஆய்வாளா் சங்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது பதிவெண் இல்லாத 3 இருசக்கர வாகனங்கள், ஒரு பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி வந்தவா்கள் வாகனங்களை போட்டு விட்டு தப்பினா்.

இதனையடுத்துஅந்த வாகனங்களை காட்டுப்புதூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com