தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சியில் ரூ. 1.53 கோடி தங்க நகைகள் பறிமுதல்

News image

திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.

Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:51 pm

Din

திருச்சி, ஆக. 14: மலேசியாவிலிருந்து திருச்சிக்கு முறைகேடாகக் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ. 1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏா் ஏசியா விமானத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வந்த பயணிகளில் பெண் ஒருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து 2.29 கிலோ (2291 கிராம்) தங்க நகைகளைக் கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத் துறையினா் அந்த நகைகளைப் பறிமுதல் செய்து, அப் பெண்ணைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.