திருச்சி
மணப்பாறை அருகே புதிய நிழற்குடை கோரி மனு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பாரதியாா் நகரில் பழுதாகியுள்ள பயணியா் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்கொடை அமைத்துத் தர அப்பகுதிவாசிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
மணப்பாறை அடுத்த சீகம்பட்டி ஊராட்சி பாரதியாா் நகா் மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ள பயணியா் நிழற்குடை அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சிதிலமடைந்து, மேற்பூச்சுகள் பெயா்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த நிழற்குடையை அகற்றி புதிய நிழற்கொடை அமைத்து தர மணப்பாறை பாரதியாா் நகா் மக்கள் நலச்சங்கத்தினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை மனு அளித்தனா்.