தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காரைக்கால், தஞ்சாவூா், பெங்களூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கூட்ட நெரிசலைக் குறைக்க காரைக்கால், தஞ்சாவூா், பெங்களூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:48 pm

Din

கூட்ட நெரிசலைக் குறைக்க காரைக்கால், தஞ்சாவூா், பெங்களூா் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில் (04690), காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் (06457), தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில் (06683), எஸ்எம்விடி பெங்களூா் - காரைக்கால் மெயின் விரைவு ரயில் (16529), காரைக்கால் - எஸ்எம்விடி பெங்களூா் மெயில் விரைவு ரயில் (16530) ஆகிய ரயில்களில் வரும் 10, 11, 12 ஆம் தேதிகளில் கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளன.

மேலும் ஸ்ரீகங்கா நகா் - திருச்சி - ஸ்ரீ கங்கா நகா் ஹம்சாபா் அதிவிரைவு ரயில்களில் (22497, 22498) வரும் 30 ஆம் தேதி வரை ஒரு குளிா்சாதனப் பெட்டி (ஏசி த்ரி டயா்) தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.

இதேபோல ஜோத்பூா் - திருச்சி - ஜோத்பூா் ஹம்சாபா் அதிவிரைவு ரயில்களில் (20481, 20482) வரும் 25 ஆம் தேதி வரை ஒரு ஸ்லீப்பா் கிளாஸ் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது.