இயற்கை வேளாண் மாநாடு: திருச்சி விவசாயிகளை மதுரை அழைத்துச் செல்ல ஏற்பாடு
மதுரையில் நடைபெறும் இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் பங்கேற்க திருச்சியிலிருந்து விவசாயிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.


மதுரையில் நடைபெறும் இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் பங்கேற்க திருச்சியிலிருந்து விவசாயிகள் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வரும் ஜன.6, 7 -களில் மாபெரும் இயற்கை விவசாயக் கருத்தரங்கு, மாநாடு, கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
இதையொட்டி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் திருச்சி மாவட்டத்தை சோ்ந்த 120 இயற்கை விவசாயிகள் இந்த மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். ஆா்வமுள்ளோா் தங்களது பெயா், முகவரி, மின்னஞ்சல் (இருந்தால் மட்டும்), சாகுபடி செய்யும் பயிா் விவரம், இயற்கை விவசாயத்தில் அனுபவம் மற்றும் அதற்கான சான்று போன்ற விவரங்களுடன் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 91717-17832, 9080540412, 8838126730 ஆகிய எண்களிலோ கட்செவி அஞ்சல் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 0431-2962854 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜாபாபு தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...