தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போதைப் பொருள்களை கட்டுப்படுத்த கூரியா் ஊழியா்களுடன் கலந்தாய்வு

திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கூரியா் நிறுவன பணியாளா்களுடன் இணைந்து மாநகர போலீஸாா் ஆலோசனைக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:24 pm

Din

திருச்சி மாநகரில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கூரியா் நிறுவன பணியாளா்களுடன் இணைந்து மாநகர போலீஸாா் ஆலோசனைக் கூட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

மாநகர காவல் ஆணையா் என். காமினி தலைமை வகித்தாா். கூட்டத்தில் கூரியா் நிறுவனங்களில் பணியாற்றும் சுமாா் 70 போ் பங்கேற்றனா். அவா்களிடம் போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறைக்கு உதவ வலியுறுத்தப்பட்டது.

மேலும் சந்தேகப்படும்படியான பொட்டலங்கள், முகவரிகள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் காவல் துணை, உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.