திருவானைக்கா, மரவனூா் கோயில்களில் குடமுழுக்கு
திருவானைக்கா சன்னதி வீதியில் உள்ள மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவானைக்கா சன்னதி வீதியில் உள்ள மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவானைக்கா சம்புகேசுவரா் கோயிலின் எல்லைக் காவல் தெய்வமான பிடாரி இரணியம்மன் கோயிலின் பதிவுக் கோயிலாக விளங்கி வரும் இக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக கடந்த 3 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டு யாகசாலைப் பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 4 ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்று, கடங்கள் புறப்பட்டு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல உறையூா் பாண்டமங்கலம் விநாயகா், சுப்பிரமணியா் கோயிலிலும் குடமுழுக்கு நடைபெற்றது.
பச்சை நாச்சியம்மன்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மரவனூரில் உள்ள பச்சைநாச்சியம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஓராண்டாக நடைபெற்ற திருப்பணிகள் முடிந்த நிலையில் நடந்த குடமுழுக்கில் திரளானோா் கலந்து கொண்டனா். அன்னதானமும் வழங்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...