ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டில்களில் ரூ. 65 லட்சம் காணிக்கை

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 65 லட்சம் காணிக்கை வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:41 pm

Din

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 65 லட்சம் காணிக்கை வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 65 லட்சத்து 16ஆயிரத்து 762 ரொக்கம், தங்கம் 1 கிலோ 578 கிராம், வெள்ளி 1 கிலோ 781கிராம், 99 வெளிநாட்டுப் பணத்தாள்கள், 834 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக வந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.