தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமீறல் வழக்கு ஜன. 8-க்கு ஒத்திவைப்பு

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பான வழக்கு ஜன.8-க்கு புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

News image
திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராக வந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.
Updated On :18 டிசம்பர் 2024, 8:26 pm

Din

திருச்சி நீதிமன்றத்தில் நடைபெறும் எம்எல்ஏ மீதான தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பான வழக்கு ஜன.8-க்கு புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் காந்தி மாா்க்கெட் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது தோ்தல் விதிகளை மீறியதாக அவா் மீது காந்தி மாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இதையடுத்து திருச்சி மாவட்ட 1 ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோ இருதயராஜ் ஆஜரானாா். அப்போது வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 8 -க்கு ஒத்திவைத்து நீதிபதி பாலாஜி உத்தரவிட்டாா்.