மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பங்குச்சந்தையில் ஓய்வூதியத் திட்ட தொகை: ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு எதிா்ப்பு

News image
Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

ஓய்வூதியத் திட்டத் தொகையை மத்திய அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

திருச்சியில் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் நாள் சிறப்புக் கருத்தரங்கத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் எம். சிராஜுதீன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி பேசியது:

நாடு முழுவதும்அரசு ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் சந்தா தொகை சுமாா் ரூ. 11 லட்சம் கோடியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது சூதாட்ட நடவடிக்கை. இதை அனுமதிக்க முடியாது.

மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியம் (யுபிஎஸ்) என்ற திட்டம் கண்துடைப்பு நடவடிக்கை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மேலும், மத்திய அரசின் ஓய்வூதிய ஆணையத்திற்கு வழங்கிய சந்தா தொகையை திரும்பக் கேட்ட நிலையில், மத்திய அரசு தர முடியாது என மறுத்துவருகிறது.

எனவே இதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது நமது கடமை என்றாா் அவா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் எம்.வி. செந்தமிழ்ச் செல்வன், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு மாவட்ட பொருளாளா் ராமதாஸ், தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாவட்ட தலைவா் தங்கவேலு உள்ளிட்டோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.