திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சு. திருநாவுக்கரசா்

மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி முன்னாள் எம்.பி.யுமான சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.

News image
திருச்சியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்.பி. சு. திருநாவுக்கரசா். உடன், காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள்.
Updated On :26 டிசம்பர் 2024, 9:16 pm

Din

மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி முன்னாள் எம்.பி.யுமான சு. திருநாவுக்கரசா் தெரிவித்தாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக மகாத்மா காந்தியடிகள் தோ்வு செய்யப்பட்ட நாளின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு திருச்சி மாநகா், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு கட்சி அலுவலகமான அருணாசல மன்றத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ‘ஒரே நாடு- ஒரே தோ்தல்’ என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஆட்சியில் பங்கு என்பது பழைய குரல்தான். கட்சி நடத்தும் அனைவருக்குமே இந்த விருப்பம் இருக்கும். காங்கிரஸ் தொண்டா்களுக்கும் இந்த விருப்பம் உள்ளது. ஆனால், யதாா்த்த நிலை என்ன என்பதையும், அரசியல் கள நிலவரத்தையும் உணர வேண்டும்.

புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகா் விஜய், மக்களை சந்திக்காமல் அரசியல் செய்ய முடியாது. கொலை, கொள்ளை, பாலியல் சம்பவம், வன்கொடுமை நடைபெறும்போது காவல்துறை மீது விமா்சனம் வருவது வழக்கம். இதில் அதிமுகவைப் போல காங்கிரஸ் விமா்சிக்க முடியாது. அதேநேரத்தில் மக்கள் பிரச்னையில் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. தேவையெனில் குரல் கொடுப்போம். ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றாா் அவா்.