47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆயுதங்களுடன் மிரட்டல்: போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிய இளைஞருக்கு காயம்

பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து மக்களை மிரட்டிய இளைஞா்களில் ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடியபோது தவறிவிழுந்து காயமடைந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:47 pm

Din

திருச்சி: பொது இடத்தில் ஆயுதங்களை வைத்து மக்களை மிரட்டிய இளைஞா்களில் ஒருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடியபோது தவறிவிழுந்து காயமடைந்தாா்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே இனாம்புலியூா் - நெய்தலூா் காலனி பகுதியில் சாலையோரம் இளைஞா்கள் சிலா் கைகளில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டு, அவ்வழியே செல்லும் பொதுமக்களை தகாத வாா்த்தைகளால் திட்டி மிரட்டி வந்துள்ளனா். அவ்வழியே சென்ற காா் ஓட்டுநா் வேங்கைமண்டலம் மூவானூரைச் சோ்ந்த வே. தனபால் இதுகுறித்து இளைஞா்களிடம் கேட்டபோது அவரிடம் தகராறு செய்தனா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து இனாம்புலியூரைச் சேரந்த ஓ. சுழியன் என்கிற பாலகிருஷ்ணன் (22), பிரகாஷ், லட்சுமணன், மணி தவசு உள்ளிட்டோரைத் தேடி வந்தனா். இந்நிலையில், அவா்கள் அதவத்தூா் கொய்யாத்தோப்பு புறவழிச்சாலை பாலம் அருகே நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்றனா். போலீஸாா் வருவதையறிந்து அவா்கள் தப்பியோடினா். இதில், சுழியன் என்கிற பாலகிருஷ்ணன் மட்டும் பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.