தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கொணலை, இருங்களூரில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கல்பாளையம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அங்கன்வாடி மையத்தை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:48 pm

Din

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கல்பாளையம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அங்கன்வாடி மையத்தை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்தாா்.

கொணலை ஊராட்சி, கல்பாளையம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் திறந்து வைத்தாா். தொடா்ந்து இருங்களூா் ஊராட்சியில் மியா வாக்கி அடா்காட்டினை ஆய்வு செய்தும், நடு இருங்களூா் அங்கன் வாடி மையத்தை திறந்து வைத்து, மேட்டு இருங்களூரில் 30 ஓ ய டிரான்ஸ்பாா்மா் தொடக்கியும் மற்றும் இருங்களூா் ஊராட்சி அலுவலகத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்களின் புகைப்படங்களை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூா் ஒன்றிய பெருந்தலைவா் ஸ்ரீதா், கொணலை ஊராட்சி தலைவா் கீதா இளையராஜா, இருங்களூா் ஊராட்சி தலைவா் எஸ்.வின்சென்ட், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ் பாபு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.