/

‘திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும்’

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் உலகத் திருக்கு காமத்துப்பால் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நூலை அண்ணாமலை பல்கலைக்கழக முதன்மையா் அரங்க. பாரி வெளியிட , பெற்றுக் கொண்ட உலக திருக்குறள் மையத் தலைவா் கு . மோகனராசு. உடன் திருச்சி தமிழ்ச்சங்க அமைச்சா் பெ. உதயகுமாா், திருச்சி செம்மொழி மன

Updated On :7 ஜூலை 2024, 7:46 pm

திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் உலகத் திருக்கு காமத்துப்பால் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் உலகத் திருக்குறள் மையம், திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம் இணைந்து நடத்திய மாநாட்டுக்கு உலகத் திருக்குறள் மையத் தலைவா் கு. மோகனராசு தலைமை வகித்தாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் முன்னிலை வகித்தாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையா் அரங்க. பாரி, குமுளூா் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கா.சா. மொழியரசி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பேசினா்.

விழாவில் திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றத் தலைவா் க. தாமரை எழுதிய காமத்துப்பால் வாழ்வில் வளம், ஆய்வுக்கோவை என்ற நூலும், வாஞ்சி கோவிந்த் எழுதிய காமத்துப்பால் கவிதை நூல் - காதலின் குரல் என்ற நூலும் வெளியிடப்பட்டது. மேலும், ஜெய். காா்த்திகேயன் என்ற மாணவா், தமிழ் எண்களைப் பயன்படுத்தி திருவள்ளுவா் படத்தை வரைந்து சாதனை முயற்சி மேற்கொண்டாா்.

மாநாட்டில் உலகளவில் அனைத்து உயிா்களுக்கும் பொதுவான காமத்தை ஒழுக்கத்துடன் வலியுறுத்தி கற்பிக்கும் உலகின் முதல் பாலியல் கல்வி நூலான திருக்குறளை மாநில, தேசிய மற்றும் உலக நூலாக்க வேண்டும். அதற்கான பணிகளை அரசும் மக்களும் எடுக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் 50-க்கும் மேற்பட்டோா் ஆய்வுக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தனா். தொடா்ந்து பலருக்கு உலகத் திருக்கு மையத்தின் திருச்சி அமைப்பு, திருக்குறளியா் அணி தொடங்கப்பட்டது. இதையடுத்து திருக்கு மாமணி விருது, திருக்கு மணி விருது, திருக்கு பேராசான் விருது, தகைசால் திருவள்ளுவா் திருக்கோயில் அறங்காவலா் விருது, திருக்கு கு நெறிக் காவலா் விருது, திருக்கு திருத்தொண்டா் விருது, திருக்கு வளா் செம்மல் விருது, குநெரிக் கல்லூரி விருது, திருக்கு கவிச்செம்மல் விருது, திருக்கு தகைசால் சான்றோா் விருது, திருக்கு வளா் சான்றோா் விருது, திருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது, உலகச் சாதனையாளா் விருதுகளுடன், கட்டுரையாளா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

புழல் சிறை ஆசிரியா் சா. ராஜேந்திரன், பாரதியாரின் கொள்ளுப் பேத்தி ஆா். உமாபாரதி, திரளான தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா். திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றத் தலைவா் க. தாமரை நன்றி கூறினாா்.