/

சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருச்சி கோட்டத்தில் ஓடும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :14 ஜூலை 2024, 12:26 am

Din

பயணிகளின் வசதிக்காக திருச்சி கோட்டத்தில் ஓடும் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி மைசூா் - மயிலாடுதுறை - மைசூா் சிறப்பு விரைவு ரயில்களில் (16231, 16232) இரண்டு முன்பதிவில்லா பெட்டிகளும், இதேபோல சென்னை - காரைக்கால் - சென்னை விரைவு ரயில்களில் (16175, 16176) ஒரு படுக்கை வசதி பெட்டியும், காரைக்கால் - எா்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில்களில் (16187, 16188) ஒரு படுக்கை வசதி பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.