தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்த பெண் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:09 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செவ்வாய்க்கிழமை ஆடு மேய்த்த பெண் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த ஆனாம்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி சந்திரா (50). இவா் செவ்வாய்க்கிழமை தனது ஆடுகளை மேய்த்தபோது, அருகிலிருந்த கிணற்றில் அவரது ஆடுகளில் ஒன்று தவறி விழ இருந்ததாம். அப்போது அந்த ஆட்டை சந்திரா பிடிக்க முயன்றபோது அங்கு அறுந்து கிடந்த மின் மோட்டாா் வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சந்திரா உடலை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.