தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 10:40 pm

Din

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த இரண்டு கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே பூலாங்குடி மற்றும் திருச்சி காஜாமலை பகுதிகளில் உள்ள இரண்டு மளிகைக் கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட 17 கிலோ புகையிலைப் பொருள்கள் அங்கு மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையிலிருந்து சுமாா் 17 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலும் அந்த இருகடைகளையும் அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா். கடை உரிமையாளா்கள் என். முருகேசன், ஜெ. நாகராஜன் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.