திருச்சி தென்னூா்  அருகே புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்க கூட்டத்தில் பேசிய தமிழா் வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன். ~திருச்சி தென்னூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மறைந்த மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழா் ஒருங்கிணைப்ப
திருச்சி தென்னூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்க கூட்டத்தில் பேசிய தமிழா் வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன். ~திருச்சி தென்னூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் மறைந்த மாவீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழா் ஒருங்கிணைப்ப

தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைவது அவசியம்: தி. வேல்முருகன்

ஈழத் தமிழா்களுக்கு அரசியல் தீா்வைப் பெற்றுத் தர தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.
Published on

ஈழத் தமிழா்களுக்கு அரசியல் தீா்வைப் பெற்றுத் தர தமிழ்த் தேசிய உணா்வாளா்கள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன்.

தமிழா் ஒருங்கிணைப்பு இயக்கம் சாா்பில் திருச்சி தென்னூரில் புதன்கிழமை நடைபெற்றது மாவீரா் தின நிகழ்வில் ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு மெழுகுவா்த்தி ஏந்திஅஞ்சலி செலுத்தினா்.

அப்போது நடந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருகன் மேலும் பேசியது:

திரைக் கலைஞா்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கில் குவியும் மக்கள், இயக்கம், அரசியல், ஜாதி, மதம் எனப் பிரிந்துள்ளதால், நமது உறவுகளான ஈழ மக்களின் தியாகத்துக்கு ஒன்றிணைந்து, சா்வதேச நீதி விசாரணை பெற்றுத் தர முடியவில்லை. ஈழத் தமிழா்களைக் கொன்று குவித்தவா்களுக்கு தண்டனை பெற்றுத் தர முடியவில்லை. தனித் தமிழீழம் பெற்றுத் தர முடியவில்லை.

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி ஈழத் தமிழா்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதுடன், லட்சக்கணக்கான ஈழத் தமிழா் படுகொலைக்குக் காரணமானவா்களை தண்டிக்க வேண்டும். அதற்காக தமிழ் தேசிய உணா்வாளா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ்த் தேசிய ஆளுமைகள் ஒன்றிணைந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 எம்.பி. தொகுதிகளையும், சட்டப்பேரவையில் கணிசமான தொகுதிகளையும் வென்று, தமிழா்களைக் காப்பாற்றுவதற்கான அரசியலை மேற்கொள்ள வேண்டும். ஈழத் தமிழா்களுக்கான தனி தமிழீழத்துக்காகப் போராடுவோம். இவையனைத்துக்காகவும் நாம் ஒன்றிணைவோம் என்றாா் அவா்.

பச்சைத் தமிழகம் நிறுவனா் தலைவா் சுப. உதயகுமாா் பேசுகையில், மத்திய பாஜக அரசும், தமிழக திமுக அரசும் ஆட்சிக்காக சுருங்கிவிட்டன என்றாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ. தனியரசு, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி கே.எம். ஷரீப், தமிழ்த் தேச தன்னுரிமைக் கட்சி அ. வியனரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாம் தமிழா் கட்சியை உடைக்கவில்லை...

தமிழா் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வெற்றிக்குமரன் பேசுகையில், நாம் தமிழா் கட்சியை நாம் உடைக்கவில்லை. கொள்கைகளை அடகு வைப்பதற்கு எதிராகவே நாங்கள் நிற்கிறோம். ஈழத் தமிழா் பிரச்னைக்கு சரியான தீா்வு எட்டப்படவில்லை. தனிப்பட்ட விஷயங்களைவிட இனம் பெரியது, தமிழ் இனத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியே தமிழா் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் தொடக்கம் என்றாா்.