பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை களத்தூா் பேருந்து நிறுத்தப் பகுதியைச் சோ்ந்தவா் கோவலன். அரசுப் பள்ளி ஆசிரியரான இவா் வீடு கட்ட கடந்த 2018 ஆம் ஆண்டு, திருச்சி கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ரூ. 19 லட்சம் கடன் வாங்கினாா். வங்கித் தவணையை முறையாகச் செலுத்தி வந்த நிலையில் கடந்த 10.01.2019 இல் மேற்படி நிதி நிறுவனத்துடன் இணைந்த எச்எஸ் பிசி கனரா ஓரியண்டல் பேங்க் ஆப் கமொ்ஸ் லைப் இன்சூரன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் மாஸ்டா் பாலிசி பெறும் வகையில், வங்கி மூலமாக ரூ. 59 ஆயிரம் அனுப்பி வைத்தாா்.