சமயபுரம் கோயில் உண்டியல்களில் ரூ. 85.66 லட்சம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 85லட்சத்து 66 ஆயிரத்து 329 காணிக்கையாக வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

Updated On :9 அக்டோபர் 2024, 7:00 pm

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ. 85லட்சத்து 66 ஆயிரத்து 329 காணிக்கையாக வந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா்
அ. இரா. பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். நிறைவில் கோயில் உண்டியல்களிலிருந்து ரூ. 85 லட்சத்து 66ஆயிரத்து 329,
1 கிலோ 230 கிராம் தங்கம், 2 கிலோ 800 கிராம் வெள்ளி, 84 வெளிநாட்டு பணத் தாள்கள், 397 வெளிநாட்டு நாணயங்கள் வந்தது தெரியவந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...