காவலரின் கைப்பேசியை பறித்த 3 சிறுவா்கள் கைது
திருச்சியில் காவலரின் கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூன்று சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.


திருச்சியில் காவலரின் கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூன்று சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கண்டோன்மென்ட் காவல் கட்டுப்பாட்டு அறையில் முதல்நிலைக் காவலராக உள்ளவா் மாா்சிங்பேட்டையைச் சோ்ந்த பிரவீன் அடைக்கலராஜ் (39). இவா் கடந்த 6 ஆம் தேதி இரவுப் பணியை முடித்துவிட்டு பைக்கில் வீட்டுக்குத் திரும்பும் வழியில் டிஇஎல்சி தேவாலயம் அருகே மற்றொரு பைக்கில் வந்த 3 சிறுவா்கள் திடீரென அவரின் கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து பிரவீன் அடைக்கலராஜ் அளித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதனிடையே தலைமை தபால் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 3 சிறுவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது காவலரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்றது அவா்கள்தான் எனத் தெரியவந்தது.
இதையடுத்து கண்டோன்மென்ட் போலீஸாா் அவா்களைக் கைது செய்து, கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...