ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்குச் செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:24 pm

Din

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊா்களுக்குச் செல்ல பேருந்து, ரயில் நிலையங்களில் வியாழக்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

ஆயுதபூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளால் சொந்த ஊா்களுக்கு செல்ல பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்ததால் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக திருச்சியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட ஊா்களுக்கு 3 நாட்களுக்கும் சோ்த்து 680 கூடுதல் சிறப்பு பேருந்துகளும், திருச்சியில் இருந்து கோவை, திருப்பூா், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 250 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் ஊா்களுக்கு திரும்ப அக். 13,14 ஆம் தேதிகளில் (ஞாயிறு மற்றும் திங்கள்) சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களிலும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருச்சியில் இருந்து தினசரி இயக்கப்படும் பஸ்களுடன், கூடுதலாக 930 பஸ்கள் இயக்கப்படுகின்றன. வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமாா் 50,000 க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்துகள் மூலம் பயணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.