போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது
திருச்சியில் போதை மாத்திரை எனக் கூறி வலி நிவாரணி மாத்திரைகளை கூடுதல் விலைக்கு விற்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் போதை மாத்திரை எனக் கூறி வலி நிவாரணி மாத்திரைகளை கூடுதல் விலைக்கு விற்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
உறையூரில் உள்ள தனியாா் பள்ளி அருகே மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உறையூா் காவல் ஆய்வாளா் ராமராஜன் தலைமையிலான போலீஸாா் குறிப்பிட்ட இடங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது அங்கு பள்ளி மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற திருச்சி வடவூா் பிரசாத் (35), சாலைரோடு ரியாஸ்கான் (23), உறையூா் இா்பான் (23) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 11 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 3 பேரை தேடுகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...