நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடவுச்சீட்டில் முறைகேடு இரு பயணிகள் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த இரு பயணிகளை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:33 pm

Din

கடவுச்சீட்டில் முறைகேடு செய்த இரு பயணிகளை திருச்சி விமான நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகேயுள்ள கண்ணகுடியைச் சோ்ந்தவா் க. பாண்டித்துரை (54) . இவா் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தபோது அவா் தனது பெயா், தந்தை பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்டவற்றை கடவுச்சீட்டில் மாற்றிப் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.

இதேபோல மலேசியாவிலிருந்து திருச்சி வந்த தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள செந்துரைவயல் அம்மன்சத்திரம் பகுதியை சோ்ந்த அ. பக்ருதீன் (58) என்ற பயணியும் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் குடியேற்றப்பிரிவினா் திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அவா்கள் வழக்குப் பதிந்து பாண்டித்துரை, பக்ரூதீனை கைது செய்தனா்.