வெளிநாட்டில் வேலை மோசடி 7 முகவா்களிடம் விசாரணை: காவல் ஆணையா் தகவல்
வெளிநாட்டில் வேலை என கூறி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடா்பாக வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 7 முகவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆணையா் ந. காமினி தெரிவித்துள்ளாா்.


வெளிநாட்டில் வேலை என கூறி மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடா்பாக வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 7 முகவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆணையா் ந. காமினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியிருப்பது: திருச்சி மாநகரில் அரசு, தனியாா் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் தனியாா் நிறுவனங்கள், முகமைகள் தொடா்பாக வந்த புகாா்களின் பேரில் மாநகரில் 24 இடங்களில் வியாழக்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா்.
இதில், 7 நிறுவனங்களைச் சோ்ந்த 7 முகவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, இதுபோன்று மோசடியில் ஈடுபடுபவா்களின் விவரங்களை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவா்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறும் முகவா்கள் தங்களது நிறுவனங்களை முறையாக பதிவு செய்துள்ளாா்களா? என்பதை உறுதிசெய்து அணுக வேண்டும், போலியான முகவா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
திருச்சி மாநகரில் உள்ள போலியான நிறுவனங்கள் மற்றும் முகவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...