/

பாலியல் தொல்லை விவகாரம்: கைதான அரசு மருத்துவா் பணியிடை நீக்கம்

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -அரசு மருத்துவா் பணியிடை நீக்கம்

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அரசு மருத்துவா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருச்சி மேலபுதூா் பகுதியில் அரசு உதவிபெறும் தனியாா் பள்ளி விடுதியுடன் இயங்கி வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக உள்ள கிரேஸ் சகாயராணியின் மகன் சாம்சன் (31) . அரசு மருத்துவரான இவா் மாணவியா் விடுதிக்கு அடிக்கடி சென்று அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சாம்சனைக் கைது செய்தனா். உரிய அனுமதியின்றி இயங்கியதாக அந்தப் பள்ளி விடுதியும் மூடப்பட்டு, அங்கு தங்கியிருந்த மாணவிகள்வேறு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனா்.

இந்நிலையில் பாலியல் வழக்கில் கைதான அரசு மருத்துவா் சாம்சனை பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.