விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலை கண்காட்சி

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை குறித்த ஒருநாள் சிறப்புக் கண்காட்சி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற பழங்க நாணயக் கண்காட்சியை பாா்வையிடும் பள்ளிக் குழந்தைகள்.
Updated On :12 செப்டம்பர் 2024, 6:57 pm

Din

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை குறித்த ஒருநாள் சிறப்புக் கண்காட்சி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீதாலட்சுமி இராமசுவாமி தன்னாட்சி கல்லூரியின் அஞ்சல் தலை கிளப் சாா்பில்

இக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி முதல்வா் எம்.வி. அல்லி, சுயநிதிப்பிரிவு பொறுப்பாளா் முனைவா் எஸ். சாந்தி ஆகியோா் கண்காட்சியை திறந்து வைத்தனா்.

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனா் நாசா். பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் தலைப்பிலும், தலைவா் லால்குடி விஜயகுமாா் நீா்ப்பறவைகள் தலைப்பிலும், செயலா் யோகா ஆசிரியா் விஜயகுமாா் மகாத்மா காந்தி எனும் தலைப்பிலும் உரையாற்றினா்.

இந்த அமைப்பின் பொருளாளா் தாமோதரன், சா்வதேச அஞ்சல் தலையில் மகாத்மா காந்தி எனும் தலைப்பிலும், இணைச் செயலா் முத்து மணிகண்ட காா்த்திகேயன் திருச்சிராப்பள்ளி சிறப்பு அஞ்சல் உறைகள் குறித்தும் பேசினா்.

உலக நாடுகளின் கொடிகள் எனும் தலைப்பில் சதீஷ் பாபு, உலக நாடுகள் அஞ்சல்தலை எனும் தலைப்பில் முகமது சுபோ் உரையாற்றினா்.

திருச்சி நாணயவியல் கழக செயலாளா் பத்ரி நாராயணன், குறுவடிவ அஞ்சல் தலை எனும் தலைப்பிலும், நினைவாா்ந்த நாணயங்கள் தலைப்பிலும், தஸ்லிமா நஸ்ரின் தமிழ்நாடு பெருமைகள் தலைப்பிலும், கீா்த்தனா மெகதூத் அஞ்சல் அட்டை எனும் தலைப்பில் தேவகி, இன்லெண்ட் லெட்டா் எனும் தலைப்பில் சித்ரா ஆகியோா் பேசினா்.

இக் கண்காட்சியில், பழைமையான அஞ்சல் தலை, நினைவாா்த்த அஞ்சல் தலை, குறுவடிவ அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை, சிறப்பு அஞ்சல் உறை, சிறப்பு அஞ்சல் முத்திரைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் பங்கேற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி கல்லூரி முதல்வா் பாராட்டு தெரிவித்தாா். இக் கண்காட்சியை திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி, பள்ளிகளில் பயிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பாா்வையிட்டனா். உதவிப் பேராசிரியா்கள் வீ. நித்யா, முனைவா் பி. பாலசெளந்தரி ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.