தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:23 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த குளித்தலை சாலை மாகாளிப்பட்டியில் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் உள்ளது. இங்கு ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ. 1 லட்சத்துக்கும் மேலான பணத்தை போலீஸாா் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட பணம் அலுவலகத்துக்கு வெளியே கைப்பற்றியது என்றும், அது தன்னுடைய இல்லை என வட்டார போக்குவரத்து அலுவலா் தெரிவித்தாா்.