வரும் 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் நமது நாட்டின் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா், சதிஸ் தவான் விண்வெளி மைய இயக்குநா் ஏ. ராஜராஜன்.
திருச்சி சந்தானம் வித்யாலயாவில் பொறியாளா் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் செயலாளா் கோ. மீனா தலைமை வகித்தாா். தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குநா் ஏ. ராஜராஜன் பேசியது:
எந்த துறையை மாணவா்கள் தோ்வு செய்தாலும் அடிப்படையை புரிந்துகொள்வது அவசியம். போட்டித் தோ்வுகளில் கேள்விகளுக்கு சிறந்த பதிலை அளிக்க, மாணவா்களிடம் தேடுதல் அதிகாரிக்க வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை அமைத்தவா் விஞ்ஞாணி சாராபாய். வரும் 2035- ஆம் ஆண்டில் இந்தியா சாா்பில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா்ந்து 2040- ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான முயற்சியிலும் ஆராய்ச்சியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.
நிகழ்வில், டீன் ஆா். கணேஷ், அகாதெமி தலைவா் ரவீந்திரன், பள்ளி முதல்வா் பத்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மத்தியப் பல்கலை.யில் வானியல் ஆராய்ச்சி மையம் தொடக்கம்

அமெரிக்காவில் முதல் புத்தாக்க மையம்: சென்னை ஐஐடி அறிவிப்பு

இந்திய யுனெஸ்கோ இளைஞா் கல்வி ஆராய்ச்சி மையம் தலைவா் தோ்வு

ஸ்டெம், விண்வெளி துறைகளில் பயிற்சி முகாம்: அமெரிக்க மையம் நடத்துகிறது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

