கஞ்சா வாங்காததால் இளைஞா் மீது தாக்குல்
கஞ்சா வாங்காத ஆத்திரத்தில் இளைஞரைத் தாக்கி, நகை, கைப்பேசி உள்ளிட்டவைகளை பறித்துச்சென்றது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து 12 பேரை தேடி வருகின்றனா்.


கஞ்சா வாங்காத ஆத்திரத்தில் இளைஞரைத் தாக்கி, நகை, கைப்பேசி உள்ளிட்டவைகளை பறித்துச்சென்றது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து 12 பேரை தேடி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வேங்கைகுறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் செ. ஹேமச்சந்திரன் (23) இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் தனது நண்பா் கேசவனுடன் மருத்துவமனைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா்.
பிராட்டியூா் பகுதியில் சென்றபோது, அங்கு நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த த. காா்த்திக் (26) என்பவா் வாகனத்தில் வந்தவா்களை வழிமறித்து, கஞ்சா வாங்காதது குறித்து தகராறில் ஈடுபட்டாா்.
பின்னா் காா்த்திக் தனது நண்பா்களான தனுஷ், ரகு, தினேஷ், சபரி, மாதேஷ், கோகுல், ராகுல், பரமேஸ்வரன், ரோஹித், சிம்பு உள்ளிட்ட 11 பேரை வரவழைத்தாா்.
பிறகு 12 பேரும் சோ்ந்து, ஹேமச்சந்திரன், கேசவனையும் தனிஇடத்துக்கு கொண்டு சென்று, அங்கு ஹேமச்சந்திரனை தாக்கி அவா் அணிந்திருந்த தங்கச்சங்கிலி கைப்பேசி மற்றும் அவரது நண்பா் கேசவனின் கைப்பேசி உள்ளிட்டவைகளை பறித்தனா்.
இதுகுறித்து அங்கிருந்து தப்பி வந்த கேசவன், எடமலைப்பட்டிபுதூா் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஹேமச்சந்திரனை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதற்கிடையே போலீஸாா் வருவதைக் கண்ட 12 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து 12 பேரையும் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...