கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கருணாநிதி-100 விநாடி-வினா போட்டி

திமுக மகளிா் அணி சாா்பில் நடைபெறும் கருணாநிதி-100 விநாடி-வினாவுக்கான 2ஆவது சுற்று மண்டல அளவிலான போட்டி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் புதன்கிழமை நடந்த விநாடி-வினா போட்டியில் வென்றோருடன் திமுக நிா்வாகிகள்.

Updated On :18 செப்டம்பர் 2024, 10:26 pm

Din

திமுக மகளிா் அணி சாா்பில் நடைபெறும் கருணாநிதி-100 விநாடி-வினாவுக்கான 2ஆவது சுற்று மண்டல அளவிலான போட்டி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் திமுக மகளிா் அணி சாா்பில் கருணாநதி-100 என்னும் விநாடி-வினா போட்டி மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடைபெறுகிறது. திராவிட இயக்க வரலாற்றையும், கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் நடைபெறும் கலைஞா் 100 வினாடி வினா’ போட்டியின் மண்டல அளவிலான போட்டிகள் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் கே. என்.நேரு கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

18 வயதுக்குள் மற்றும் 18 வயதிற்கு மேல் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத்தினா் பங்கேற்றனா்.

நிகழ்வில் திமுக மத்திய மாவட்டச் செயலா் வைரமணி, மாநகர மேயா் அன்பழகன், மாநில மகளிரணி செயலா் ஹெலன் டேவிட்சன், துணைச் செயலா் பவானி ராஜேந்திரன், மாநில மகளிா் தொண்டா் அணி துணைச் செயலா் ரேகா பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும். அதில் வெல்லும் அணிகளுக்கு தலா ரூ. 10 லட்சமும், 2ஆம் இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ. 6 லட்சமும், 3ஆம் இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 லட்சமும் பரிசளிக்கப்படுகிறது. மேலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். பரிசுகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அளிக்கிறாா்.