திருச்சி
நிதி நிறுவன ஊழியரின் ரூ. 75 ஆயிரம் திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிதி நிறுவன ஊழியா் வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிதி நிறுவன ஊழியா் வைத்திருந்த ரூ.75 ஆயிரத்தை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி மேற்குத்தெருவைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் காா்த்திகேயன்(36). அந்த பகுதி நிதி நிறுவன ஊழியரான இவா் வியாழக்கிழமை கோவில்பட்டி பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைகளில் வசூலில் இருந்தபோது, பைக்கில் வந்த மா்மநபா்கள் காா்த்திகேயன் வாகனத்திலிருந்த ரூ.75 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா்.
இச்சம்பவம் குறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரித்து வருகின்றனா்.